2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதி

Princiya Dixci   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன் எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு நகரில் மீண்டும் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று திங்கட்கிழமை (28) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபாரம் செய்ய முடியும்.

இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. 

மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நேற்று (27) கூடிய மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்புச் செயலணி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

இதேவேளை, சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை உத்தரவுக்கேற்ப  கொவிட் செயலணியின் தீர்மானத்தின்படி, அனைத்து மத ஸ்தலங்களிலும் மத நிகழ்வுகள் மற்றும் உற்சவங்கள் இடம்பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X