Mayu / 2024 ஜனவரி 16 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (15) கார் ஒன்று, தரித்து நின்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

காத்தான்குடியை நோக்கி சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து இடம் பெற்றதாக அருகிலிருந்த பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பயணம் செய்த பயணிகள் மூவருமாக நால்வர் காயமடைந்துள்ளதோடு கார் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீ.எல்.ஜவ்பர்கான்



12 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago