Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், இவ்வருட மானாவரி (வான்மழையை எதிர் பார்த்த) நெற் செய்கைக்கான கூட்டம், இன்று காலை 9 மணிக்கு, வாகரைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் என்று, விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதேச விவசாயிகள், பண்ணையாளர்கள், விவசாய, நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச செயலக மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் அடுத்த பெரும்போகச் செய்கைக்கான ஆரம்ப விதைப்பு வேலைகள், இறுதி விதைப்புக் காலம், மற்றும் கால்நடைகளை நெற் செய்கை நிலப்பரப்புக்களிலிருந்து மேய்ச்சல் தரைக்கு அப்புறப்படுத்தல், உர மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்தாலோசித்து, தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மானாவாரி, மத்திய மற்றும் மாகாண நிருவாக பெரு நீர்ப்பாசனம், சிறு நீர்ப்பாசனம் உட்பட மொத்தமாக 21 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதென, பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் ரீ.வேலவேந்தன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .