2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விகாரையில் கோவில் நிர்மாணம்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் முருகன் - பிள்ளையாருக்கான கோவிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (22) மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரையின்  விகாராதிபதி பட்டபொல குணநந்த ஹிமியின் தலைமையில் நடைபெற்றது.

இன நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், இந்து கோவில் ஒன்று அமைத்துத் தருமாறு விகாரைத்தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே, இந்த கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெகதீஸ்வர சர்மா தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று, கோவிலுக்கான அடிக்கல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன்,  திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு - விகாரையொன்றில் முதல் முறையாக கோவில் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X