2025 மே 07, புதன்கிழமை

விசேட துஆ பிரார்த்தனை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா நோயிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டி, விஷேட துஆ பிராத்தனை, நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாயல்களில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயலில் விசேட துஆ பிராத்தனை. பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது காவத்தமுனை அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் மௌலவி ஏ.எம்.அப்துல்லாஹ், விசேட பேருரையும் விஷேட துஆ பிரார்த்தனையையும் நடத்தினார். 

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும், இந்த நாட்டில் கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டு வரும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர், சுகாதார துறையினர் ஆகியோருக்கு தேகாரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், கொரோணா நோய் ஒட்டுமொத்தமாக உலகில் இருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X