2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விடுதியில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

Editorial   / 2020 மே 10 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எஸ்.சபேசன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனியார் அலைபேசி தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைந்துள்ள தங்கும் விடுதியில் கசிப்பு உற்பத்தியிலும் கஞ்சா செடி வளர்த்தும் வந்த அந்த நிறுவனத்தில் கடமையாற்றும் இருவர், நேற்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனரென, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த விடுதியை சுற்றிவளைத்த புலனாய்வுப் பிரிவினர், அங்கு தங்கிருந்து கடமையாறி வந்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கருவப்பங்கேணி நாவற்கேணியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஒருவரையும் சாடியொன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த மாத்தறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கசிப்பு ஒரு போத்தல், கோடா, கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள், சுமார் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி என்பன இதன்போது மீட்டுள்ளன.

இதேவுளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (08) காலை 6 மணி தொடக்கம் சனிக்கிழமை (09) காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் கசிப்பு, ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X