Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வன்புணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வித்தியாவின் வழக்கில் மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (27) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்நாட்டில் சிறுவர், மாணவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், வன்புணர்வு என்ற பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
“நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக இவ்வாறான தீர்ப்புகள் மாத்திரமல்ல, பெண்மகள் கொடூரமாக வன்புணர்வு செய்யப்படுகின்ற போது அவற்றுக்கு பாரிய தண்டணை கொடுக்கின்ற போது மாத்திரம் தான் கொடூரமான பாவிகளில் இருந்து நாங்கள் பெண்களையும் சிறுவர்களையும் மீட்க முடியும்.
“நாட்டை நல்ல முறையிலே முன்னுதாரணமான நாடாக வழி நடத்த முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
5 hours ago