2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமொன்றை, கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி கல்விக் கோட்டம் - புதிய காத்தான்குடியிலுள்ள அஷ்ஷுஹதா வித்தியாலய மாணவர்கள், காத்தான்குடியில் இன்று (21) காலை முன்னெடுத்தனர்.

இந்த ஊர்வலம், பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி, புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் வீதி வழியாகச் சென்று, மீண்டும் பாடசாலை முன்றலில் நிறைவடைந்தது.

இதில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இல்மி அஹமட் லெவ்வை, புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பஸ்மிலா பைரூஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், அபிவிருத்தி உத்தியோகத்தர் பழீலா அனீஸ், பாடசாலை அதிபர் முஹமட் முனீர், ஆசிரியர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X