2025 மே 21, புதன்கிழமை

விவசாயத் திட்டங்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் நல்லிணக்கம் சார் பொருளாதார வலுவூட்டல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், விவசாயத் திட்டங்களுக்கென தொழில் உபகரணங்கள், இன்று (03) வழங்கப்பட்டன.

வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ச்சியாக விவசாயம் மேற்கொண்டுவரும் தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு உபகரணங்களைக் கையளித்த பின்னர் பயனாளிகள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ். சுதாகர்,

“குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு வழங்கப்படும் இவ் உபகரணங்கள் அந்த நோக்கத்துக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.

“இவைகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி எமது பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கும்.

“அதேவேளை, இவ் உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீட்டினுள் இருந்தாலோ அல்லது வேறு விதமாக பயன்படுத்தினாலோ அதனை மீளப் பெற்று சரியான முறையில் பயன்படுத்த தயாராக இருக்கும் வேறு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பமும் அமையும்.

“இதனை உணர்ந்து, இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி, தமது வருமானத்தை விவசாயிகள் அதிகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .