Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
“இந்த நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது” என, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
சுமார் 690 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டு செலவில் மட்டக்களப்பு, கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு, கிரான்புல்சேனையில் நேற்று (24) நடைபெற்றது.
ஆரம்ப வேலைகளுக்காக 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்பொது, பிரதேச விவசாயிகள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய இரா. சம்பந்தன் தெரிவித்ததாவது,
“இதுவரை காலமும், கைகளால் மனித உழைப்பின் மூலம் மண்ணைக் கொண்டு இந்த அணைக்கட்டை எழுப்பி, பிரதேச விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு வந்திருந்தனர். அது பெரும் சிரமங்களுடன் இடம்பெற்று வந்தது.
“ஆனால், அதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைத்தாற் போல தற்போது இந்த அணை பாரிய நிதிச் செலவில் உறுதியாகக் கட்டப்படவுள்ளதால் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயத்தை மேற்கொள்ள முடியும்.
“இவ்வாறே நாட்டின் பல இடங்களில் ஜனாதிபதி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோரின் தலைமையில் விவசாய மறுசீரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், இந்த கிரான்புல் அணைக்கட்டை அண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தக் காரியம் இடம்பெறுகின்றது.
“விவசாய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் புதிய திட்டங்கள் இன்னுமின்னும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
“பிரதேச விவசாயிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வசதியை மென்மேலும் முழுமையாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்திலும் வாழ்விலும் முன்னேற்றம் காண வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .