2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விஸ்தரிக்கப்பட்ட நவீன கடை தொகுதி கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு நகரை அண்மித்த கல்லடிப் பகுதியில் பொதுமக்களினதும் வர்த்தகர்களினதும் பாவனைக்காகவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும், மட்டக்களப்பு மாநகர சபையால் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி, நேற்று (12) திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு மக்களால் செலுத்தப்பட்டு வரும் வரிப் பணம், மீண்டும் பொதுமக்களுக்கே பயனுள்ளதாக மாறவேண்டும் என்ற நோக்கோடு, இத்திட்டததை அமுல்படுத்தியதாக, மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

சந்தைக் கட்டடத் தொகுதி, மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் மாநகர ஆணையாளர் காசி சித்திரவேல், பிரதி மேயர் கந்தசாமி சத்தியசீலன், பிரதி ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன், மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X