Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 24 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், பி.எம்.எம்.ஏ.காதர், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எல்.எம்.ஷினாஸ், எச்.எம்.எம்.பர்ஸான்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ் நிலை காரணமாக, புனித நோன்புப் பெருநாளான இன்று (24) காலை கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தங்களது நோன்புப் பெருநாளுக்கான தொழுகைகளை நிறைவேற்றினார்கள்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்தும் சுகாதார நடைமுறைகளைாப் பின்பற்றியும் சமூக இடைவெளிகளைப் பேணியும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள இஸ்லாமியர்கள், தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடியில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புத்தாடைகளை அணிந்து, வீடுகளில் குடும்ப உறவினர்கள் கூடி, நோன்பு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன், பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர்.
அம்பாறை - கல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.
திருகோணமைலை - கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, மூதூர், கந்தளாய், குச்சவெளி உள்ளிட்ட பிரதேசங்களிலும் இஸ்லாமிய மக்கள் அமைதியாகவும் வீட்டில் இருந்தவாறும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.
வழமையாக பெருநாள் தொழுகைகள், மைதானங்களிலும் பள்ளிவாசல்களிலும் இடம்பெறுவது வழக்கமாகும்.
தற்போதுள்ள சூழ் நிலையில் பெருநாள் தொழுகைகளை, வீடுகளிலேயே தொழுதுகொள்ளுமாறும் பெருநாளை, வீடுகளில் இருந்தே அமைதியாக கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025