Princiya Dixci / 2022 மே 15 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் நேற்று (14) கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெசாக் தினத்தையொட்டி, இன்று (15) தொடக்கம் இரு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுபான போத்தல்கள் இவ்வாறு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 750 கால் போத்தல்கள் மதுபான போத்தல்களும், 480 பியர் டின்கள், 94 பியர் போத்தல்கள் உட்பட சுமார் 06 இலட்சம் ரூபாய் பெறுமதியாக மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனை இயங்குவது தொடர்பிலான புலனாய்வுத்தவல்களுக்கு அமைவாக இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025