Princiya Dixci / 2021 மார்ச் 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி அனுமதிப்பத்திரம் காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று (27) கைது செய்ததுடன், வெடிபொருட்களை மீட்டு, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேச கல்குவாரியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, அங்கிருந்து 166 டைனமற்குச்சிகள், 10 யார் கொண்ட சேவா நூல் 20, 20 டெக்கினேற்றுக்களை மீட்டதுடன், அவற்றை வைத்திருந்த நபரையும் கைது செய்தது, வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
6 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
05 Mar 2026