Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 14 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டும்” என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கை எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதிக்கான இளைஞர் மாநாடு, பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (13) மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழரை முதலமைச்சராக்கியது மஹிந்த ராஜபக்ஷதான். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்தவர்கள், வேறு யாருக்கோ முதலமைச்சர் பதவியைக் கொடுதார்கள்.
“தற்போது நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால், வெளிநாடுகளைப் போன்று கொரோனாவால் அதிகப் பேர் மரணித்திருப்பார்கள். எமது அரசாங்கம், மக்களின் உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுகின்றது.
“எவர் வந்தாலும் கூச்சலிடலாமே தவிர, நாட்டைக் கொண்டு நடத்த முடியாது. நாட்டைக் கொண்டு நடத்தக்கூடிய சக்தி, மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு மாத்திரமே உள்ளது.
“எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. வெளிநாடுகளிலும் 4 மடங்கு பொருள்களுக்கு விலைகள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, பாதாளத்துக்குச் சென்ற நாட்டைத்தான் எமது ஜனாதிபதி பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
18 minute ago
32 minute ago