2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கிவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரையில் வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்த 400 பேருக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஷ் தலைமையில்,  உலர் உணவு பொதிகள், நேற்று (09) மாலை வழங்கிவைக்கப்பட்டன.

வெள்ள அனர்த்தால் பாதிக்கப்பட்ட வாகரை மக்கள், தட்முனை பாடசாலையில் தஞ்சடைந்திருந்தனர்.

இவர்களுக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜேர்மனியிலுள்ள “அம்மா” அமைப்பின் அனுசரனையுடன், அரிசி ,பருப்பு,  சீனி, கோதுமை மா, உட்பட அத்தியாவசிய பொருட்களாள் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் கொண்ட பொதிகளை, கட்சியின் வாகரை அமைப்பாளர் சதீஸ்காந், மாவட்ட செயலாளர் கே. நவநீதன், பொருளாளர்  க.கனசபை (நாதன்) வவுணதீவு அமைப்பாளர் வினோதன் உட்பட கட்சி உறுப்பினபர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு வழங்கிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .