Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணானை, சாலம்பன் சேனைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நான்கு யானைகளின் உடலங்கள், நீரேடையில் காணப்படுவதாக, பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, நீரில் மூழ்கி இந்த யானைகள் இறந்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
யானைக் கூட்டம், வழக்கமாக மேற் குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையைக் கடந்து அருகிலுள்ள பிரதேசங்களான புணானை, வாகரை, கிருமிச்சை, ஆலங்குளம் போன்ற கிராமங்களுக்குச் செல்வது வழக்கமாகும்.
வெள்ளம் ஏற்பட்ட வேளை, யானைகள் சில, நீரோடையைக் கடந்து மறுபக்கம் சென்றுள்ளதாகவும் ஏனைய யானைகள் கடந்து செல்லமுற்பட்ட வேளை பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால், இதில் சிக்கி அவை இறந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், குறித்த இடத்திலிருந்து யானைகளின் உடலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025