Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழைமை அதிகாலை சுமார் 2.30 மணியளளவ்வில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி )சார்பில் களுதாவளை வடக்கு வட்டாரத்தில் விகிதாசார முறையில் போட்டியிடும் குணராசா ஜெகதீஸ்வரன் என்பரின் வட்டா ரக லொறியே, இவ்வாறு தீக்கிராயாக்கப்பட்டுள்ளது.
களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்னாலுள்ள வீதியருகில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலே இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பின்னால் வைக்கப்பட்டிருந்த ரயரை எடுத்து வாகனத்தின் மேல் போட்டு எரித்து விட்டு இனந்தெரியாத நபர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் சென்றுள்ளனர்.
அதிகாலை வேளையில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது, அயலவர்கள் உடவே வெளியில் வந்து பார்தபோது புகை மண்டலம்போல் காட்சியழித்திருந்தது, பின்னத்தார்ன வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் எரிந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
பின்னர் அயலவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் வாகனத்தின் உட்பாகங்கள் அனைத்தும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.குணவர்த்தன உள்ளிட்ட குழுவினர், நிலைமையைப் பார்வையிட்டதோடு, மேலதிக விசாணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
3 hours ago