2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

“மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேளையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்” என  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,  மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (26) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரமத அதிதியாக்க கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. அனைவருக்கும் வீடுகள் வழங்கவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக உள்ளது. மக்கள் தகரக் கொட்டில்களில் வாழ்கின்றனர். அந்த மக்களுக்கு ஒரு வாழ்வாதார உதவி வழக்க எங்களது அமைச்சு முன்வருகிறது.

“கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது, தமிழ் மக்களின் சரித்திரமே ஒரு சமுதாயமே அழிந்துவிட்டது. இந்த பகுயில் உள்ள அரசி ஆலையை புதுப்பித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவேன். இதற்கான அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்குவதாக கூறினார். அதை பார்த்து உடனடியான வேலையை ஆரம்பிக்க முன்வருகின்றேன்.

நாங்கள் வேலை செய்வது மக்களின் முன்னேற்த்துக்காகவே. சமுதாயம் முன்னேற வேண்டும். சமுதாய முன்னேற்றத்துக்கான கடமையை ஏற்றுக்கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு சார்பாக ஒத்துழைப்பு வங்குகிறார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும்

“பனை சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயாராக உள்ளன. பன மரங்களை வளர்பத்தில் எமது மக்கள் ஆர்வம் காட்டினால் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப நான் தயாராகவுள்ளேன்” என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X