Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, ஆர்.ஜெயஸ்ரீராம்
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
அவ்வைத்தியசாலைக்கு, சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட நவீ்ன வசதிகளைக் கொண்ட அம்பியூலன்ஸ்களை, வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு, வைத்தியசாலை வளாகத்தில் நேற்று (20) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
வைத்திய அத்தியட்சகர் டொக்டர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மேலும் தெரிவிக்கையில்; இவ்வைத்தியசாலைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்ட பலமாடிக் கட்டடத் தொகுதியொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளனவெனக் குறிப்பிட்டார்.
இதற்குப் பொருத்தமான இடத்தையும் அடையாளப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவினர் அடுத்த வாரம் இங்கு வருகை தரவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்துக்கான நிதியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய நிபுணர், வைத்தியர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணர், தாதியர்கள் அடங்கலான ஆளணி நியமனத்தை விரைவில் தருவதாக, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் என்னிடம் வாக்குறுதி அளித்துள்ளாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
2 hours ago