2025 மே 02, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலை குறித்து ஆளுநர் ஆராய்வு

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள குறைகள் குறித்த கலந்துரையாடலொன்று, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜஹம்பத், அவ் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் குழு ஆயோருக்கிடையில் இன்று (11) நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில், நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 60க்கும் மேற்பட்ட வைத்திய நிபுனர்கள் இருக்கின்ற போதும், வைத்திய உபகரணங்கள், இயந்திரங்களின் தட்டுப்பாட்டால் முழுமையான சிகிச்சையை இங்கு வழங்க முடியாதிருப்பதாக, சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிய சிங்ஹ, ஆளுநர் செயலாளர் பிரசன்ன மதநாயக, வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X