Niroshini / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று(25) வரை வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.லால் துஸார தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு(2016) ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று(25) வரை 50 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியும் 23 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுமுள்ளனர்.
மேலும், 32 வாகனங்கள் இந்த விபத்துக்களினால் சேதமடைந்துள்ளன. இந்த விபத்துக்கள் காத்தான்குடி மற்றும் கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த மாதத்தின் முதலாம் திகதி தொடக்கம் முதல் இன்று வரை ஆறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்தும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
வாகன விபத்துக்கள் மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பொலிஸாரினால் நடாத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
13 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago