Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வாகரை மகா வித்தியாலய மண்டபத்தில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வேர்ள்ட் விஷன் லங்கா மற்றும் எஸ்கோ ஆகிய தன்னார்வத் தொண்டு உதவி நிறுவனங்கள் இந்த கருத்தரங்குக்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தன.
கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ரீ.திருச்செல்வம், கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற விரிவுரையாளர் என்.யோகேஸ்வரன், கணித சிரோமணியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான பி. நமசிவாயம் ஆகியோர் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago