2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீடு, மலசலகூட வசதிகளின்றி திக்கோடையில் சுமார் 230 குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் சுமார் 485 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், சுமார் 100 குடும்பங்கள் வீட்டு வசதியின்றியும் சுமார் 130 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றியும் உள்ளதாக அக்கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்தது.

மேலும், அக்கிராமத்தின் ஒரு பகுதியான தும்பாலைப் பகுதியில் தற்போது வரட்சியான காலநிலை நிலவி வருவதால், அங்குள்ள கிணறுகளில் நீர் வற்றுகின்றது. இதன் காரணமாக சுமார் 89 குடும்பங்கள் குடிநீருக்கு சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அச்சங்கம் கூறியது.

விவசாயம், கருங்கல் உடைத்தல், கூலி வேலை செய்தல் ஆகியவற்றை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள தங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு மற்றும் மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டம் தமக்குக் கிடைக்கும் பட்சத்தில் இக்கிராம மக்களுக்கு அவ்வசதிகள் செய்து கொடுப்படும் என போரதீவுப்பற்றுப் பிரதே செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X