Gavitha / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
இலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரி, இலங்கை இருதயச் சங்கம் மற்றும் மட்டக்களப்பு வைத்தியச் சங்கம் என்பன இணைந்து நடாத்திய இரு நாட்கள்; கொண்ட தொடர்ச்சியான மருத்துவ அறிவு பற்றி தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான இறுதிநாள் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (06) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் தலைவர் வைத்தியக் கலாநிதி நிஹால் குணதிலக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புதிய மருத்துவ ஆராய்ச்சி முறைகள், புதிய கண்டு பிடிப்புக்கள், புதிய ஆய்வுகள், நவீன முறைகள் மற்றும் உபகரணங்கள் பற்றி கிழக்கு மாகாண வைத்தியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள், கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டன.
தொற்றா நோய், தாய்மாருக்கான மருத்தவ வசதிகள், நோய்களைக் கண்டு பிடித்து இன்றுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்துகளை வழங்குவது பற்றிய விளக்கம் மற்றும் இருதய துடிப்பு, இழப்பு எனும் தலைப்புகளில் துறைசார் வைத்திய நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
இலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் 6ஆவது வருடாந்த சம்மேளனத்தின் தொனிப் பொருளாக 'நவீன உயர் தொழில்நுட்ப வசதிகளை மென்மையான முறையில் பாவித்து நோயாளிகளை மையமாக வைத்துப் பராமரித்தல்' எனும் வருடாந்த கல்விசார் அமர்வுகள் எதிர்வரும் 22 முதல் 24 வரை கொழும்பு சினமன் கிரண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago