2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கல்லடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியே விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருமே படுகாயமடைந்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணம் செய்த அந்தோனிமுத்து விமலதாஸ் (வயது 50), அவரது மனைவி திருமதி அனுஸியா விமலதாஸ், பிள்ளைகளான வி.ஜயந்தன் (வயது 17), வி.டிலகஸனா (வயது 08) மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கல்லடியைச் சேர்ந்த கந்தசாமி சிவகுமார் (வயது 49) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X