Niroshini / 2016 ஜூலை 23 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பகுதிதயில் இன்று சனிக்கிழமை, மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில், சந்திவெளி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் ஓட்டமாவடியில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் ஏறாவூர்- முதலாம்குறிச்சியைச் சேர்ந்த முஹம்மது தம்பி முஹம்மது இப்றாஹிம் (வயது 58) என்பவர் படுகாயமடைந்து சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago