2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு -வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேளாண்மை வெட்டும் இயந்திரத்தின் டயர் காற்றுப் போனதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வேளையில்,  சந்திவெளியிலிருந்து பனிச்சங்கேணிக்கு வியாபாரத்துக்காக மீன் எடுப்பதற்கு சென்றுகொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிள் வேளாண்மை வெட்டும் இயந்திரத்துடன் மோதியது. இந்த நிலையில்,  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தலையில் அடிபட்டு மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  அழகையா ராஜேஸ்வரன் (வயது 41) என்பவரே இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .