Kanagaraj / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்குள்ளானவர் சிகிச்சை பயனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்றிரவே மரணித்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி -06, கர்பலா வீதி நூராணியா பள்ளிவாயலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் எல்ப் வண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபரீதம் இடம்பெற்றது.
இதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முஹம்மது சலீம் (வயது-52) என்பவர் படுகாயங்களுக்குள்ளாகி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் திங்கள் இரவு மரணமானார்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய எல்ப் வாகனத்தைச் செலுத்திச் சென்ற அதன்சாரதி தங்கவேல் பிரசாந்தன் (வயது 34) என்பரை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்ற அதேவேளை கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடிவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago