2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் 9 பேர் காயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறுப் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றுகொண்டிருந்த வட்டா ரக வாகனத்தின் சில்லில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.

தைப்பொங்கலுக்காக உறவினர்களின் வீட்டுக்குச் சென்று திரும்பியவர்களே விபத்துக்கு உள்ளானார்கள்.

இதில் படுகாயமடைந்தவர்கள் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையிலும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X