2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மாணவிகள் நால்வர் படுகாயம்

Thipaan   / 2016 மார்ச் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் நான்கு பேர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலொரு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மாணவிகள், பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு  வீடு திரும்பும் வழியில், மஞ்சள் கோட்டில் வீதியை கடக்கும் போது, மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து  வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X