2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் மௌலவி உயிரிழப்பு

Gavitha   / 2016 மார்ச் 20 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,பேரின்பராஜா சபேஷ்

காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தின் போது காயமடைந்த ஏறாவூர் ஜாமியுல் அக்பர் மத்ராஸாவின் விரிவுரையாளர் மௌலவி அபுல் ஹஸன் முஹம்மத் ஒஸாமா (வயது 24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து ஏறாவூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது படுகாயமடைந்தவர், ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X