2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெளியிட மாணவர்களுக்கு காத்தான்குடியில் பதிவு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வெளியிடங்களிலிருந்து வந்து காத்தான்குடிப் பிரதேசத்தில் தங்கி கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னராக தங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யுமாறு காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

சம்மேளனக் காரியாலயத்தில் இப்பதிவை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ள அச்சம்மேளனம், இம்மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலனைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சம்மேளனம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பில் சம்மேளனப் பிரதித் தலைவர், சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி ஆகியோர் iகொயப்பமிட்டு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.


 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X