Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பில் பெய்த மழையைத் தொடர்ந்து போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட3 வீதிகளைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால், அவ்வீதிகளுடனான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளியிலிருந்து மண்டூருக்குச் செல்லும் பிராhன வீதியில் இரண்டு இடங்களில் வெள்ளம் பாய்ந்து செல்வதனால் இவ்வீதியூடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வெல்லாவெளியிலிருந்து பாலையடிவட்டை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் நீர் நிரம்பி வழிவதனால் இவ்வீதியூடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு வீதிகளில் அவசர அத்தியாவசிய போக்குவரத்துக்களுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்காக போரதீவுப்பற்று பிரதேச சபையின் டிரக்டர் வாகனங்களை ஒழுங்கமைத்துக் கொடுத்துள்ளோம்.
இவற்றினை விட காக்காச்சுவட்டையிலிருந்து ஆனைகட்டியவெளி நோக்கிச் செல்லும் பிரதான வீதியையும் ஊடறுத்து மழை நீர் பாய்வதனால் இதற்கு படகுச்சேவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன் கிழமை (25) மழை குறைந்துள்ள காரணத்தினால் இந்நிலைமை புதன்கிழமை (25) பிற்பகலுடன் சீரடையலாம் என நம்புகின்றோம் என போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்திடம் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago