Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
சர்வதேச ரீதியில் அசுத்தமான கடற்கரையோரங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்;.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த 17ஆம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்து நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு, சவுக்கடிக் கடற்கரையில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தேசிய கரையோர தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். கடற்கரையோரங்களின் இயற்கைத் தன்மையை இழக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது' என்றார்.
'மேலும், இலங்கைக் கடற்கரையின் அமைப்பு, வளங்கள் மற்றும் அழகு காரணமாக இங்கு உல்லாசப் பயணிகள் அதிகளவில் வருகின்றார்கள். அபிவிருத்தியின் முதல் நுழைவாயிலாக கடற்கரை காணப்படுவதால், உலகில் வளர்ச்சி அடைந்த தலைநகரங்கள் கடற்கரையோரத்தை மையமாகக் கொண்டிருக்கின்றன.
'கடலில் குளிக்க முடியாத இடங்களில் இளைஞர்கள் குளிக்கச் செல்வது இங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது. ஆகவே, ஆபத்தை உணர்ந்தவர்களாக எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago