Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் திட்டமிடப்படாத முறையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள், வடிகான்கள் மற்றும் அனுமதியுடன் மாற்றம் செய்யப்பட்ட கட்டடங்கள் ஆகியவை காரணமாக மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகும் என மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
உள்ளூராட்சி வாரம் -2016ஐ முன்னிட்டு 'நகர் வலம்' எனும் தொனிப்பொருளில் மாநகர சபைக்கு உட்பட்ட 24 வட்டாரங்களிலும் வரி நிலுவைகளை அறவிடுவதற்காக கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, மாநகர மண்டபத்தில் புதன்கிழமை (28) மாலை நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மக்களின் சுகாதார மற்றும் சௌகரிய வசதிகளைக் கருத்திற்கொண்டும்; மாநகர சபையின் ஒழுங்கு முறைக்கு ஏற்பவும் கட்டடங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. குறித்த கட்டட நிர்மாணப் பணிகளின் பின்னர் 14 நாட்களுக்குள் மாநகர சபையால் இயைபுச் சான்றிதழ் வழங்கப்படும். இத்தகைய சான்றிதழ்களைக் கொண்ட கட்டடங்கள் மாத்திரமே மாநகர சபையின் அனுமதி பெற்றவையாகக் கருதப்படும்' என்றார்.
'இம்மாநகர சபைப் பிரிவில் 41,860 பேர் ஆதன வரி செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். இவர்களில் 31,360 பேர் கடந்த வருடத்துக்கான ஆதன வரி செலுத்தியுள்ள அதேவேளை, சுமார் 10,500 பேர் ஆதன வரி செலுத்தாமல் உள்ளனர். எனவே, பரிசீலனை மேற்கொண்டு எஞ்சியோரிடமும் வரியை அறவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது' எனவும் அவர் கூறினார்.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago