Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளக்கூடிய வேலைகளை தனியாருக்கு வழங்குகின்றமையானது அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துபோகும் நிலைமையைத் தோற்றுவிக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளின்; சேவை மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இன்று புதன்கிழமை காலை கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும் 20 நகர சபைகளும் 9 பிரதேச சபைகளும் உள்ளடங்கலாக 12 உள்ளூராட்சி சபைகளும்; உள்ளன. இம்மன்றங்களின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்களை ஒப்பந்த அடிப்படையில் வெளி ஒப்பந்தக்காரர்களுக்கு அதிகாரிகள் வழங்கி வேலைகளைச் செய்விக்கின்றனர்.
உள்ளூராட்சி சபைகள் ஊடாக செய்யக்கூடிய வேலைகளை தனியாருக்கு வழங்கிச் செய்விப்பதால், சபைகளுக்குள் அரசாங்க உள்ளூராட்சி நிர்வாகத்தின் ஊடாக வேலைகளைப் பெற முடியாத நிலைமை தோற்றுவிக்கப்படுகின்றது. இதனால், அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து போகக்கூடிய நிலைமை உள்ளது. உள்ளூராட்சி சபை இவ்வாறான வேலைகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago