2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'அரசியல் தீர்வுக்காக த.தே.கூ. இதயசுத்தியுடன் செயற்படுகிறது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெறும்; நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தமது அரசியல் பணியை முன்னெடுத்து வருகின்றது. இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து  தமிழ் மக்களும் கூட்டமைப்பை தொடர்ந்து பலப்படுத்த வேண்டுமென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, தாந்தாமலைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (01) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எதிர்காலத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அனைத்துத் தமிழ் மக்களும் த.தே.கூ. வை ஆதரிக்க வேண்டும்' என்றார்.

'பட்டிருப்புத்தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை இம்முறை தவறிவிட்டமைக்காக தற்போது மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதியின்றி, அனுசரணையின்றி, தன்னிச்சையாக பல நிகழ்வுகள் நடைபெறுவதை காணமுடிகிறது.

எவர் அபிவிருத்திப் பணிகளைச் செய்தாலும், அவற்றை  நாம் கேட்டுப் பெறவேண்டும். ஏனெனில், சொந்தப்பணத்தில் எவருமே அபிவிருத்திகளைச் செய்வதில்லை. எமது வரிப்பணத்தின் மூலமே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளைச் செய்கின்றது. அது எமக்குரிய நிதி என்பதை நாம் அறியவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X