Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 15 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சிப் பிரதேசங்கள் 1985ஆம் ஆண்டின் இனக்கலவர காலத்துக்கு முன்னர் செழிப்பு மிக்கதொரு வர்த்தக நகராக இருந்து வந்துள்ளது. எனினும், இனக்கலவரத்தின் பின்னர் இந்நகரம் சோபை இழந்து காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சிகள் மற்றும் எல்லை நகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக புதிய வர்த்தக சங்கம் ஆரம்பிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இனக்கலவரத்தின் பின்னர் சோபை இழந்து காணப்படும் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சிப்; பிரதேசங்களை தொடர்ந்தும் இதே நிலைமையில் விட்டுவிடாமல், மீண்டும் இதனை செழிப்பும் சுறுசுறுப்பும் மிக்க வர்த்தக நகராக மாற்ற வேண்டும்' என்றார்.
'பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள், மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்கு வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் பூரண ஒத்துழைப்புத் தேவை. புதிய வர்த்தகர் சங்கம் இப்பிரதேச வர்த்தகர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago