2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'இவ்வருட இறுதிக்குள் இருபதாயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்படும்'

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், தீசான் அஹமட், பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஏனைய பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு இந்த வருட முடிவுக்குள் இருபதாயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் பாதணிகள் வழங்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்றில் இருக்கும் பல பாடசாலைகளுக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை நேரடியாக இனம் கண்டு அவர்களில்  தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்ள 1000 ரூபாய் வீதமும் வழங்கி வைத்தார்.

அதன் பின்னர், ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலய கேட்போர் கூட்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறாவூர் பகுதியின் பின் தங்கிய தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு, நேரடியாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லிம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் சகிதம், வெள்ளிக்கிழமை (22) விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் குழுவினர், அங்கு மாணவர்களின் நிலையினைக் கண்டதன் பின்னரே அவர்களுக்கான உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தனர்.

இந்த நிகழ்வுக்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத்தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான முழக்கம் மஜீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஏ.முபீன், ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வை.எஸ்.ஹமீட், மற்றும் பல அதிதிகளும், அதிகாரிகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X