Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
சர்வதேச எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, எச்.ஐ.வி. நோய் தொற்றும் காரணிகள், இந்நோய் தொற்றாமலிருப்பதற்கான வழிமுறைகள், மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், இந்நோய் தொடர்பான விடயங்களை ஊடகங்களில் எவ்வாறு வெளிக்கொணர்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம், தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு நிபுணர் வைத்தியர் சத்தியா ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago