Suganthini Ratnam / 2016 ஜூலை 22 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,த.தவக்குமார்
யுத்தம் மற்றும் சமாதானம்; தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பு, ஊடக தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தமிழ்மொழி மூலம் பத்திரிகை வாயிலாக 'யுத்தத்துக்குப் பின்னர் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள்' தொடர்பில் கட்டுரை வடிவில் கருத்துகளையும் தகவல்களையும் வெளிக்கொணர்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தெரிவு செய்யப்பட்டு 'சிறந்த கட்டுரையாளருக்கான (தமிழ்) விருதும்' பெறுமதி வாய்ந்த பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
யுத்தம் மற்றும் சமாதானம்; தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் நாட்டுப் பணிப்பாளர் எம்.அஸாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய உரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்தார்.
2008ஆம் ஆண்டு ஐந்து ஊடக அமைப்புகள் இணைந்து நடத்திய ஊடக விருது வழங்கும் நிகழ்வில் 'சிறந்த மக்கள் சேவை ஊடக விருதும்' கடந்த 2013ஆம் ஆண்டு மட்டக்களப்பு களுமுந்தன்வெளி விநாயகர் கலைக்கழகம் நடத்திய விருது வழங்கும் நிகழ்வில் 'சிறந்த பிரதேச ஊடகவியலாளர் விருதும்' சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago