2025 மே 26, திங்கட்கிழமை

'எட்டு ஆண்டுகள் கடந்தபோதும் அரசியல் தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஐனாதிபதி மாறியுள்ளார், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எங்கள் மக்களுக்கான அரசியல் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை' என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் முன்றலில்; இன்று   நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'உயிர்நீத்த சுமார் 150,000 மக்களுக்கான நீதி உள்நாட்டு விசாரணை மூலமோ அல்லது சர்வதேச பொறிமுறை மூலமாகவோ இதுவரை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடன் இன்று எமது உறவுகளை நினைவுகூருகின்றோம்.
 
மேலும், இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர்  வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த  மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X