Suganthini Ratnam / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வில் அம்மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று (22) தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, 'தமிழ் மக்கள் பேரவையானது சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை, முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் குரல் கொடுக்கும்.
தமிழ் மக்கள் பேரவையானது, முஸ்லிம் மக்களைப் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. எமது சகோதர இனமாகவே முஸ்லிம்;களை பேரவை நோக்குகின்றது' என்றார்.
'நாம் சிறுபான்மையினர். எமக்கு எதிராக இந்த நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளை உலகத்துக்கு வெளிக்காட்டும் ஒரு நிகழ்வாக எழுக தமிழ் நிகழ்வைப் பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடனும் தமிழ் மக்கள் பேரவை பேசியுள்ளது.
ஆகவே, இம்மாகாணத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புகள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபடுவதன் மூலம் பலமான வெற்றியை அடைய முடியும்.
அதற்குத் தமிழ் மக்கள் பேரவை நடத்தும் இந்த எழுக தமிழ் நிகழ்வு முக்கிய இடத்தை வகிக்கும்.
இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 21ஆம் திகதி நடைபெறவிருந்த 'எழுக தமிழ் பேரணி' எதிர்வரும் 10ஆம் திகதி
நடைபெறும் என்று அப்பேரவை அறிவித்துள்ளதுடன், தவிர்க்க முடியாத காரணங்களால் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அப்பேரவை தெரிவித்தது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago