Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 02 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
'தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு எவருடைய உரிமையையும் பறிக்கவில்லை என்பதுடன், ஓர் இனத்தை ஒதுக்கி அரசியல் செய்ய வந்ததும் அல்ல. இந்த நாட்டில் அரசியல் தீர்வு கிடைக்கும்போது, அந்தத் தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்' என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இன ஐக்கியத்துடன் வாழ்ந்தமை அனைவரும் அறிந்ததே. இதன் பின்னர், எங்கள் மாணவர்கள் தமிழர்களுடன் இணைந்து கல்வி கற்க முடியாது என்று முஸ்லிம் பாடசாலைகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி என்ற கல்வி வலயத்தை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் இன ரீதியான பாகுபாட்டை உருவாக்கியவர்கள், இனிவரும் தேர்தல்களில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர்' என்றார்.
'நாட்டின்; தென்பகுதியில் கூட்டு எதிரணியினரால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கம் முழுக்கவனம்; செலுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையின்றி செயற்படுகின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி என்று கூறுகிறார்கள். ஆனால், ஆட்கள் மாறியுள்ளனர். ஆட்சி மாறவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு த.தே.கூ. வழங்கிய பங்களிப்பை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் 11 உறுப்பினர்கள் இருக்கின்றபோதிலும், முதலமைச்சர் பதவி இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 73 சதவீதம் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால், ஒருவர் மாத்திரம்; மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 26 சதவீதமுள்ள முஸ்லிம்களில் மூவர் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவா நல்லாட்சி?
தமிழ் மக்கள் பெரும்பான்;மையாக வாழும் பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம்கள் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் பிரதேசங்களை நாம் கேட்கவில்லை. எமது பிரதேசங்களுக்கு அரசாங்கம் தமிழர்களை ஏன் நியமிக்கப்படவில்லை என்றே கேட்கிறோம்'எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
20 minute ago
2 hours ago