Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.தவக்குமார்,எஸ்.சபேசன்
இலங்கையிலே ஒருகாலத்தில் கல்வி கற்ற இனமாக தமிழ் இனம் இருந்துள்ளது. ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் கல்வி சென்றுகொண்டிருக்கின்றமை வேதனையான விடயம். ஆகையால் கல்வியிலே எதிர்காலத்தில் முன்னேறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிசெய்யவேண்டும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார்
மண்டூர் மதி ஒளி விளையாட்டுக்கழகத்தின் 52ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வு ஞாயிற்றுக்pழமை (23) மாலை மண்டூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'யாழ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரு மாணவர்களை சுட்டுக்கொன்ற பொலிஸாருக்கு உடனடியாக நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு முன் உரிய தண்டனை வழங்வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்; இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
எமது தமிழ் இளைஞர்களாகிய நீங்கள் ஒலிம்பிக்போட்டிகளில் பங்குபற்றி பெருமைகளை எமது மண்ணுக்கும் மக்களுக்கும் தேடித் தரவேண்டியவர்களாக திகழவேண்டும் அந்த வகையில் இந்த இடத்தில் எமது இனத்துக்குப் பெருமை தேடித்தந்த வீரர்களை ஞாபகப்படுத்துகின்றேன் பாக்குநீரினைக் கடந்த ஆழிக்குமரன் ஆனந்தன் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் போன்று நீங்களும் விளையாட்டுத்துறையில் முன்னேறி இந்த நாட்டுக்கும் எமது மண்ணுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்
இன்று அகில இலங்கையில் மதுப்பாவணையில் அதிகம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாகவும் அதிலும் இளைஞர்கள் அதிகமாக மதுவினைப் பாவிப்பவர்களாக இருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது. தயவுசெய்து எதிர்காலத்தில் இவை அனைத்தினையும் மறந்து கல்வி கலாசாரம் பண்பாடு விழுமியங்களைப் பாதுகாக்கவேண்டும் அது இளைஞர்களின் கைகளிலே தங்கியுள்ளது
இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து இனங்களுக்கும் அரசியலில் இருந்து அனைத்தினையும் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழ்த்தலைவர்களே என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது' என்றார்.
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago