2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிணறுகள் பாவனைக்கு கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா, குருந்தையடி ஆகிய கிராமங்களில்; அமைக்கப்பட்ட கிணறுகள் புதன்கிழமை (27) பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.  

கடும் வரட்சியான காலத்தில் கன்னங்குடா, குருந்தியடி, காஞ்சிரங்குடா ஆகிய கிராமங்களிலுள்ள  கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் வற்றுவதால், மக்கள் சிரமத்தை எதிர்நோக்கிவந்தனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் கவனத்துக்கு அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியத் தனவந்தர்கள் மற்றும் தனிநபர்களின் உதவியுடன் 02 கிணறுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கிணறும் 85,500 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X