2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

நாடு பூராகவும் கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைத்ததன் நோக்கம் குற்றச்செயல்களையும் அதில் ஈடுபடுபவர்களையும் தடுத்து சிறந்த ஒற்றுமைமிக்க பண்புள்ள சமூகத்தை உருவாக்குவதே என வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

அவர் தொடர்ந்து பேசுகையில், 'சிவில் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் எமது நாட்டில் சட்டத்தையும் பாதுகாப்பையும் ஒழுங்கினையும் பாதுகாக்கின்ற பொலிஸாரைப் போன்றே இதற்கு சமமான ஒரு குழுக்களே. இந்தக் குழுக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராமங்களில் நடைபெறுகின்ற கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள், சட்டவிரோத மதுபான விற்பனை, சிறுவயது திருமணங்களை கண்டறிந்து அதனை  பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுக்களுக்கு அதிகாரம் அழிக்கப்பட்டுள்து.


கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது நாட்டில் மூவின இனத்தவர்களும் பல இழப்புக்களை சந்தித்துள்ளார்கள் காரணம் யுத்தமே. இன்று பாருங்கள் எமது நாட்டில் துப்பாக்கி சத்தமில்லாத ஒரு நல்ல காலச்சூழல் நிலவுகின்றது நாம் அனைவரும் இப்போது சந்தோஷமாக வாழ்கின்றோம் அல்லாவா?' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X