Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
எல்லா விடயங்களுக்கும் சட்டங்கள் உள்ளன. சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தினால் சிறுவர்கள், பெண்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் இல்லாமல் போய்விடும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'பாடசாலை இடைவிலகல், ஒழுங்கற்ற பாடசாலை வரவு என்பன கல்வியைப் பாதிக்கின்ற விடயமாகும். எனவே, இதனை முக்கியமாகக் கவனத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் குடும்பங்களில் பிள்ளைகள் போஷாக்குடையவர்களாக இருந்தனர். அக்காலத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக்கவில்லை. ஆனாலும், பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டியதும் அவர்களுக்காக போதுமான போஷாக்கு உணவுகளை வழங்குவதும் பெற்றோர்களின் கடமையாகும். இது பொறுப்பாகும். இந்தப் பொறுப்பினைச் செய்யத்தவறுகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நாங்கள் எல்லோரும் கூடியிருந்து சட்டங்கள் இருக்கின்றனவா என்று கலந்துரையாடுவதனை விடவும், சட்டத்தினை சரியாக நடைமுறைப்படுத்தினால் எல்லா விதமான பிரச்சினைகளும் தானாகத் தீர்ந்துவிடும். ஒவ்வொரு சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.
போதிப்பதிலோ ஆலோசிப்பதிலோ நேரத்தினை விரயம் செய்வதனைவிடவும் சட்டத்தினை சரியாகப் பார்த்தால் சரி. 18 வயது வரையில் பிள்ளைகளுக்கு சரியான கல்வியைக் கொடுக்கவேண்டியது பெற்றோரது கடமை. அதற்குத் தவறினால் பெற்றோரைத்தான் தண்டிக்க வேண்டும்' என்றார்.

11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago