2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'90 சதவீதமான முச்சக்கரவண்டிகள் சட்டவிதிகளுக்குட்பட்டதாக இல்லை'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து 100 முச்சக்கரவண்டிகளை சனிக்கிழமை (23) சோதனைக்கு உட்படுத்தியபோது, 90 சதவீதமான முச்சக்கரவண்டிகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்குட்பட்டதாக இருக்கவில்லையென  அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பரிசோதகர் காச்சனா விமலச்சந்திர தெரிவித்தார்.

வீதிகளில் சென்ற முச்சக்கரவண்டிகள் இடைநிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, திருத்தவேண்டிய முச்சக்கரவண்டிகள் தொடர்பில்; சாரதிகளுக்கு அறிவுறுத்தியதுடன், முச்சக்கரவண்டிகளை திருத்துவதற்கான பத்திரங்களும் காலஅவகாசத்துடன் வழங்கப்பட்டன.

வாகன விபத்துகளில் 15 சதவீதமானவை முச்சக்கரவண்டிகளாலேயே இடம்பெறுகின்றன. இதன் காரணமாக முச்சக்கரவண்டிகளை சோதனை செய்யும்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இச்சாரதிகள் முறையான அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கின்றனர். இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்கு முரணான வகையில் முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள  மின்குமிழ்கள் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X